முஹம்மட் றின்ஸாத்
அஸ்ஸலாமு அலைக்கும்
உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதனை மீடியாக்கள் முலம் நாளுக்கு நாள் அறியக் கூடியதாக உள்ளது.
இவர்கள் ஏன் தற்கொலை செய்து காெள்கின்றனர் என்று பார்த்தால்
சமீப காலமாக அதிகரித்துவரும் குடும்ப பிரச்சனைகள் மற்றும் காதல் தோல்விகளால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அதேவேளை கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு, காதல் தோல்வி, கடன் பிரச்சனை, தீராத நோய் போன்ற பலவிதமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை தாங்களே மாய்த்துக் கொள்ளும் நிலையினை இன்று சமுகத்திலே காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்ய எண்னும் ஒருவர் ஒரு விடயத்தினை சற்று சிந்தித்து பார்க வேண்டும் எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினை எதுவாக இருந்தாலும் நாம் தற்காெலை செய்து கொள்வதனால் தீர்ந்து விடப் போகின்றதா? இல்லை தற்கொலை செய்த பின்னர் எமது உயிர்தான் திரும்ப வரப் போகின்ரதா? இல்லை நிச்சயம் இல்லை ஆகவே எமக்கு ஏற்படுகின்ற எவ்வாரான பிரச்சினைகளானாலும் அதனை சமாளிக்கக் கூடிய தைரியத்தினை நங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இன்னும் ஒரு விடத்தினை பாருங்கள் இரண்டு கால்களை இழந்த , இரண்டு கைகளை இழந்த , இரண்டு கண்களை இழந்த எத்தனையோ பேர் இந்த உலகத்தில் உயிர் வாழ வில்லையா
ஆ அப்படி என்றால் உயில் வாழலாம் கதல் தோல்வி என்றால் எங்களால் தாங்க முடியவில்லை அதான் தற்கொலை செய்கின்றோம் என்கின்றீர்களா அல்லது கடன் தொல்லை தாங்க முடிய வில்லை என்கின்றீர்களா அல்லது கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு அதன் தற்கொலை செய்கின்றோம் என்கின்றீர்களா இவ்வாரானவர்களுக்கு தான் எல்லாம் வல்ல அல்லாஹ் சரியான பதிலினை வழங்குகின்றான் பாருங்கள்……..
தற்கொலையை தடுக்கும் இஸ்லாமிய செய்தி:
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)
நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்
அல்குர்-ஆன் 4 : 93.
ஒரு உயிரை வரம்பு மீறி கொலை செய்வது எப்படி குற்றமோ, அதைப் போல ஒருவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதும் கொலை செய்வதில் அடங்கும். முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு கூலி நரகம். அதில் அவர் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனத்தின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். மேலும், இதே எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்களும் சொல்லிக் காட்டுகின்றார்கள்.
5778 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (5778)
கடன் உள்ள நிலையில் இறந்து விட்ட ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுவார். அப்போது “தம் மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் அவர் ஏற்பாடு செய்துள்ளாரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்து விட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால், அவருக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிப்பார்கள். அவ்வாறில்லை எனில், (முஸ்லிம்களிடம்) “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்” என்று கூறி விடுவார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்(து மதீனா அரசில் நிதி குவிந்)த போது, “இறை நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, யார் தம் மீது கடன் இருக்கும் நிலையில் (அதை அடைப்பதற்காக ஒன்றையும் விட்டுச் செல்லாமல்) இறந்து விடுகிறாரோ, அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். யார் இறக்கும் போது செல்வத்தை விட்டுச் சென்றுள்ளாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்” என்று கூறுவார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் 3309)
கடனாளியாக மரணித்த ஒருவருக்கு எப்படி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாமல், “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்” என்று சொன்னார்களோ அதைப் போல, தற்கொலை செய்து கொண்டவருக்கும் நபியவர்கள் தொழுகை நடத்த மறுத்தார்களே தவிர, நாம் தொழவைப்பதற்கு நபியவர்கள் தடை போடவில்லை என்பது தான் அவர்களின் வாதம். ஆனால் இந்த வாதம் பல வகையில் தவறான வாதமாகும்.
யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி: 5778 – அபுஹூரைரா(ரலி)
யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார்.
யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தை கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார்.
இது மட்டுமின்றி தற்கொலை செய்து கொள்வோருக்கு ஜனாசா தொழுகை எனப்படும் இறுதி பிரார்த்தனை கூட கிடையாது எனும் மார்க்க சட்டத்தின் படி முஸ்லிம்களின் தற்கொலை விகிதசாரம் மற்ற மதத்தினரை விட மிகக்குறைவாக இருப்பதாக தற்கொலை குறித்த ஒரு தேசிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது! ஆக இஸ்லாம் ஒன்றே தற்கொலைக்கு தீர்வு என்பதை உலகிற்கு இந்த செய்தி உணர்த்துகிறது!
அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை பயந்து கொண்டு தற்கொலையில் இருந்து எம்மை பாதுகாக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தான் துனை நிற்க வேண்டும் …
ஆமின் …….