அவுஸ்திரேலிய அகதிக் கொள்கை மாற்றப்பட வேண்டும்- இந்தோனேசியா

download (4)இலங்கை அகதிகளை படகில் அழைத்துச்சென்ற கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய கடற்படையினர் கப்பம் வழங்கியமை உண்மையானால் அவுஸ்திரேலியா தமது புதிய குடிவரவு கொள்கையை நிறுத்த வேண்டும் என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் படகுகளை தமது கடலில் இருந்து இந்தோனேசியாவுக்கு திருப்பிய அனுப்பியதுடன் அகதிகள், பப்புவா நியூகினி மற்றும் நௌறு தீவுக்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் உடன்பாடும் உள்ளது.

எனினும் இறுதியாக வந்த படகை இந்தோனேசிய கடலுக்குள் திருப்பியனுப்பிய அவுஸ்திரேலிய கடற்படையினர், படகில் இருந்த கடத்தல்காரர்களுக்கு கப்பம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது நிரூபிக்கப்படுமானால், தமது நாட்டுடன் அவுஸ்திரேலிய செய்துக்கொண்ட உடன்படிக்கையை சீரமைக்க வேண்டியேற்படும் என்று இந்தோனேசிய வெளியுறவு பேச்சாளர் ஆர்மந்தா நாசிர் தெரிவித்துள்ளார்.

எனினும் மனித கடத்தல்காரர்களுக்கு கப்பம் வழங்கியமையை அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.