முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 1600 பணியாளர்கள் இருந்தபோதும் ஒரு அமைச்சையாவது அவரால் நடத்தமுடியவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மஹிந்தவிடம் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இருந்தபோதும் அவற்றை பசிலும், கோத்தபாயவுமே இயக்கி வந்தனர்.
இந்தநிலையில் தாம் ஜனாதிபதியாக இருந்தபோது 283 பணியாளர்களுடன், 6 அமைச்சுக்களை நடத்திவந்ததாக சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார கொள்கையை பொறுத்தவரையில் வெளிநாட்டு கடனைப்பெறும் போது 2 வீத வட்டிக்கே கடன் பெறப்படவேண்டும். எனினும் மஹிந்தவின் அரசாங்கம் 9வீத வட்டிக்கு கடனைப் பெற்றுள்ளதாக சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.