ராஜபக்ஷர்களின் சதித்திட்டம் உச்சகட்டத்தை அடைவதற்கு முன்னர் அதனை முறியடிக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ‘முன்னாள் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சதித்திட்டம், தற்போது ஓரளவேனும் வெற்றியளித்துள்ளது’ எனவும் குறிப்பிட்டார்.