458 பேருடன் நதியில் மூழ்கிய சீன உல்லாச கப்பல் !

article_1433229673-8

 சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த உல்லாசக் கப்பல் ஒன்று நேற்று இரவு 9.30 மணியளவில் யாண்ட்சே நதியில் மூழ்கியதையடுத்து, நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற இந்த கப்பல் சீன நகரான நஞ்சிங்கில் இருந்து சோங்குயிங்க்கு சென்று கொண்டிருந்தபோது கடும்புயலில் சிக்கி ஹ_பி பகுதியில் உள்ள யாண்ட்சே நதியில் மூழ்கியது.

இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் தத்தளித்த 20 பேரை உயிருடன் மீட்டுள்ளனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லையென சின்குவா என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

கப்பலின் மாலுமி மற்றும் பொறியியலாளர்கள் என 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள் சிக்கிய கப்பலில் 405 சீன பயணிகள், 47 கப்பல் பணியாளர்கள், டிராவல் நிறுவனத்தின் தொழிலாளர்கள் 5 பேரும் இருந்தனர் என்று சீ அரசு தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்துக்குள் சிக்கிய பகுதியில் தொடர்ந்து கன மழை மற்றும் கடும் காற்று வீசுவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

article_1433229881-china-ship600 article_1433229673-8 article_1433229665-7 article_1433229645-5 article_1433229370-4 article_1433229359-3 article_1433229350-2