“பழ நெடுமாறனின் கருத்துக்கள் உண்மையாக இருக்க வேண்டும், உலகத் தமிழ் பேரவையின் தலைவர் என்ற வகையில் பழ நெடுமாறனை முழுமையாக நம்புகிறோம்.”
இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற “வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி” வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் என காட்டப்பட்டது அவரது உடல் கிடையாது, பல காலமாக தொடர்ச்சியாக இதை மறுத்து வருகின்றேன்.
டி என் எ பரிசோதனையை செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்.
ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கி முன்னெடுக்கும் செயல்பாடுகளுக்கு, பழ நெடுமாறன் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருடன் இணைந்து நாங்களும் பயணிக்கத் தயார்.
பழ நெடுமாறன் ஐயாவை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.” இவ்வாறு இன்றைய செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.