பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி

பிரித்தானியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளதுடன், உக்ரைனியப் போர்வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி தாம் வருகைதந்துள்ளதாக கூறியுள்ளார்.

உக்ரைன் அதிபரின் உரையை கேட்பதற்காக நாடாளுமன்றம் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிரம்பியிருந்ததுடன், அவர் உரையாற்ற ஆரம்பித்த போது அதிகமான கரகோஷம் எழுப்பட்டது.

ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக உக்ரைன் அதிபர் பிரித்தானியாவிற்கும் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மன்னர் சார்ள்ஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த ஆண்டு ஒரு தீர்மானமான இராணுவ வெற்றியை உக்ரைன் எட்டுவதை தனது அரசாங்கம் பார்க்க விரும்புவதாக ரிஷி சுனக் கூறியுள்ளார்.