ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை செய்யப்பட்டார்

 

ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கொழும்பு நீதவானால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​அவர் மீதான சகல குற்றச்சாட்டுகளையும் வாபஸ் பெறுமாறு பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதன்படி அவர் இன்று நீதவானால் விடுதலை செய்யப்பட்டார்.

 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.