இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பிங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (28.04.2021) சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதிக்கும் தனக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோன்று இருநாடுகளுக்குமிடையிலான உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் பலமடைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பிங் (Wei Fenghe) தனது வருகையை நினைவுகூரும் வகையில் விசேட விருந்தினருக்கான நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார்.
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), சீன மக்கள் இராணுவத்தின் ஒன்றிணைந்த பணிக்குழாம் திணைக்களத்தின் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஷாஓ யென்மின்ங் (Lt. Gen. Shao Yuanming), மேஜர் ஜெனரல் சீ கோவை (Ci Guowei) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.