إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எச் . பதியுஸ் ஷமான் தனது 64 ஆவது வயதில் இன்று காலை ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் நகரில் வபாத்தானார்கள் . மாவனல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட பதியுஸ் ஷமான் அவர்கள் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் . அன்னார் LAKE HOUSE ஊடக நிறுவனத்தில் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தார் . அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக !
மீரா அலி ரஜாய்