நல்லது கெட்டதை இனங்கண்டு சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு இன்றைய தினத்தை அதிஷ்டமாக கருத வேண்டும் என பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நியாயம் நிலைநாட்டப்படும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டுகின்றார்.
முறையற்ற நடவடிக்கைகளில் இருந்து நீங்கி, கௌரவமான பிரஜையாக அனைவருக்கும் வாழக்கூடிய சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு புத்த தர்மத்தை ஆசானாக கொண்ட அரச கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புற செயற்பாடுகளால் அன்றி, உண்மையான ஆன்மீக செயற்பாடுகளால் மாத்திரமே வாழ்க்கையை அர்த்தமாக்கிக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள பொசன் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற கலாசாரங்களுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதற்கு பொசன் தினத்தில் உறுதி பூண வேண்டுமென பிரதமரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.