அரசாங்கத்திற்கு எதிராகவே ஜெனீவா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1616667791667"}

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், இலங்கையின் ஜனநாயக விரோத அரசாங்கத்துக்கு எதிராகவே கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான யோசனையின் 17.5 பக்கங்கள் போர் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டுவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பக்கங்கள் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னிறுத்திக் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஊடகச் சுதந்திரம், சிறுபான்மையினர் தொடர்பான கவலைகள் என்பன இதில் அடங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை நிராகரித்த வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தலையீடு செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.