ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 21 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன.
அத்துடன் இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் களந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ், பெலிவியா, சீனா, கியுபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பகிஸ்தான் மற்றும் வெனிசுவேல ஆகிய நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன.
வாக்கெடுப்பு நேற்று எடுக்கப்படவிருந்த போதும் சில திட்டமிடல் சிக்கல்களைத் தொடர்ந்து இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய வாக்கெடுப்புடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வு நிறைவுப் பெறவுள்ளது.