தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்- பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1615801129784"}

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டத்தின் கீழ் 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாத்தறை – ராகுல கல்லூரியிலும், மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியிலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்திற்கான பாடசாலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.