அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து – ஜோ பைடன்

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1608753682085"}

அமெரிக்க அரசின் முக்கிய துறைகளை குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை, அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த சைபர் தாக்குதலால் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் இந்த சைபர் தாக்குதலை தடுப்பது மிகவும் சிக்கலாக உள்ளது என அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை(சி.ஐ.எஸ்.ஏ) கூறியது.

அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் ரஷியா இதனை மறுக்கிறது.

இந்த நிலையில் சமீபத்திய இந்த சைபர் தாக்குதல் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


டெலாவேர் மாகாணத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல் அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய தாக்குதல் ஆகும். இது எனது நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

இந்த சைபர் தாக்குதலின் நோக்கம் மற்றும் அது ஏற்படுத்திய சேதத்தின் அளவு பற்றி இன்னமும் எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் மிகவும் கவனமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதிநவீன சைபர் கருவிகளை பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகள் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே இந்த நாச வேலைக்கான ஏற்பாடுகளை செய்து நமது உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துறையில் இருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், அமெரிக்க அரசு துறைகளிடம் இருந்தும் முக்கியமான தரவுகளைத் திருடியுள்ளன.உண்மை என்னவென்றால் டிரம்ப் நிர்வாகம் இணைய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க தவறிவிட்டது. இந்த தாக்குதல் பற்றிய டிரம்பின் பகுத்தறிவு மிகவும் குறைவு. நமது வாழ்க்கையின் பெரும்பகுதி ஆன்லைனில் நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் சைபர் தாக்குதல் என்பதை நமது தலைமை கடுமையான அச்சுறுத்தலாக கருத வேண்டும். ஆனால் டிரம்ப் தலைமை அப்படி செய்யவில்லை.

அடுத்த 4 வாரங்களுக்கு அமெரிக்க நலனைப் பாதுகாப்பது ஒரு ஜனாதிபதியாக அவரது பொறுப்பாகும். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் நான் அதை செய்வேன்.

என தெரிவித்துள்ளார்.