சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியின் வெற்றி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சகம் சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் இலங்கை தூதர் கலாநிதி பாலித கோஹனவிற்கு எழுதிய கடிதத்தில் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி வெற்றிகரமாக இருந்தால், உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலுடன் இராஜதந்திர தலையீட்டின் மூலம் தடுப்பூசியைப் பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எனினும், உலகில் பல நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன.
அந்த தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாட ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே முடிவு செய்துள்ளார்.