மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின்உறுப்பினர்கள், தேர்தல் நடைபெறும் முறையை மாற்ற அமைச்சு மட்டத்தில் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பழைய அல்லது புதிய முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னர் இந்த முறை மாகாண சபை தேர்தல்களை புதிய முறையின் கீழ் நடத்துவது எளிதாக இருக்கும் என்று ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.