பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான அறிவிப்பு..!

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1607337177001"}

பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை இம்மாத்த்திற்குள் புதுப்பிக்காவிட்டால், ஜனவரி மாதத்திலிருந்து அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய பயண விதிகள் 2021 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து மாற்றப்படுகின்றன.

ஆறு மாதத்திற்கும் குறைவான காலாவதி காலத்திலிருக்கும் பிரித்தானிய பாஸ்போர்ட்டுகள் இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்லாது.

அதாவது, 2021 கோடைக்காலத்தில் காலாவதியாகும் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்போர், இளவேனிற்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்கமுடியாது.

அத்துடன் ஒன்பதரை ஆண்டுகள் பழமையான பாஸ்போர்டுகளும் இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இனி செல்லப்பிராணிகளுக்கான பாஸ்போர்ட்டுகளும் செல்லாது என்பதால், செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் இனி தங்கள் செல்லப்பிராணிகளை வெளிநாடு கொண்டு செல்லவேண்டுமானால், அவற்றிற்கு முறையாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்க கால்நடை மருத்துவர் அளிக்கும் சான்றிதழ் ஒன்றை கொண்டுசெல்லவேண்டியிருக்கும்.

ஆகவே, பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்டுகளை புதுப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வது நன்று.