ஆகிறாவைப் பயப்படு
இறைத்தூதுக்கு வழிப்படு
ஈவிரக்கம் கொள்
உறவினரை ஆதரி
ஊதாரித்தனம் தவிர்
எல்லோர்க்கும் சலாம் சொல்
ஏவலை எடுத்து நட
ஐவேளை தொழு
ஒற்றுமையாய் வாழ்
ஓதிய பின் கேள்
ஒளடதம் மறுத்தல் மடமை.
கருணையுடன் நட
காழ்ப்புணர்வு நீக்கு
கிடைத்ததில் திருப்தி கொள்
கீழுள்ளோரைக் கவனி
குடும்பத்தை நிர்வகி
கூடுதல் அன்பு காட்டு
கெடுதல் செய்யாதே
கேட்போர்க்குக் கொடு
கைம்பெண்ணுக்கு உதவு
கொடுமையை எதிர்
கோபத்தைத் தவிர்
கெளரவத்தை இழக்காதே
சகாத் வழங்கு
சாலையில் ஒழுங்கு பேண்
சிந்தித்துப் பேசு
சீராகத் உடை அணி
செருக்குக் கொள்ளாதே
சேர்ந்து நட
சைத்தானை நிராகரி
சொல்லில் கண்ணியம் பேண்
சோம்பல் கொள்ளாதே
செளகரியத்தில் நன்றி கொள்.
தண்ணீரில் கழிக்காதே
தாடியை வழிக்காதே
திருமறை ஆராய்
தீயவற்றைத் தடு
துஷ்டருடன் சேராய்
தூய்மையைக் கைக் கொள்
தெரியாதோர்க்கும் கொடு
தேவையற்ற செயல் நீக்கு
தையலரை மதி
தொழில் செய்து வாழ்
தோழமை வெறுக்காதே
தெளபா செய்
பக்குவமாய் வாழ்
பாதை ஒழுங்கு பேண்
பிள்ளைகளுக்கு இரங்கு
பீதியை உண்டாக்காதே
புகழுக்கு மயங்காதே
பூமியை அபகரிக்காதே
பெற்றோரை மதி
பேருபகாரம் செய்
பை அத்தை மாற்றாதே
பொறுமை கைக் கொள்
போதை மறு
பெளதிக வளம் பேண்.
நல் வார்த்தை பேசு
நாவைப் பேணு
நின்று அருந்தாதே
நீர் தொடராய்க் குடியாதே
நுழைய முன் அனுமதி கேள்
நூதன அனுஷ்டானம் எதிர்
நைந்தோர்க்கு கை கொடு
நொடியும் இணை வைக்காதே
நோன்பினால் பாவம் தவிர்
மரியாதை அளி
மாற்று மதம் மதி
மிருகத்தனம் கொள்ளாதே
மீட்டாத கடன் பாவம்
முறை தவறி உழைக்காதே
மூடருடன் தர்க்கம் தவிர்
மையத்தின் குறை மறை
மொழியில் பெருமை இல்லை
மோதலைத் தவிர்
மெளட்டிகம் மறு
வட்டி எடுத்தல் ஹறாம்
வாட்டி வதைத்தல் ஹறாம்
விபச்சாரம் ஹறாம்
வீண் செலவு ஹறாம்
வெறி தருபவை ஹறாம்
வேறார் பொருள் ஹறாம்
வைதல் ஹறாம்
இன்னும் ஆயிரம்
இருக்கு இஸ்லாத்தில்
சொன்னவை துளியே
சொல்லாதவை ஆழியே