இலங்கை மத்திய வங்கியில் நடந்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி திருடர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் இன்னும் வழக்கு தாக்கல் செய்யவில்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது நீதியமைச்சர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கியின் திருடர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனுக்கு நீதிமன்ற அறிவிப்பாணையை வழங்க முடியாதுள்ளது என்பதால், வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.