இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு வெறுமனே கொவிட் வைரஸ் மாத்திரம் காரணம் எனக் கூறிவிட முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர்

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1605167176428"}

நாட்டின் பொருளாதார இன்று வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டில் நாடாக மீட்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு வெறுமனே கொவிட் வைரஸ் மாத்திரம் காரணம் எனக் கூறிவிட முடியாது. இதற்கு முன்னர் ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள், நாசகார வேலைகளும் காரணமாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடனுக்கான வட்டியாக மட்டும் 1430 பில்லியன் ரூபாய்களை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியில் ரூபாவின் விலை குறைவடைந்ததனால்  1,772 பில்லியன் ரூபாய்கள் மேலதிக கடனாக அதிகரித்துள்ளது.

இந் நிலையில் கொவிட் நிலைமைகளை சரியாக கையாண்டும் மக்களை பாதுகாத்தும் தொற்றுநோய் தாக்கங்களை தவிர்க்க பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு இந்த நெருக்கடிகள் அனைத்தையும் வெற்றிகொள்ளும் ஆண்டாக அமையும் என நம்புவதாகவும் அவர் இதன்போது கூறினார்.