கொரோனா – ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய காணி தயார் !

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1605030659227"}


ஏ.எச்.எம்.பூமுதீன் 

கொரோனாவால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஒரு ஏக்கர் காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் – முசலி பிரதேசத்தில் உள்ள , வேப்பங்குளத்திலேயே – குறித்த காணி உள்ளது.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் – சிலாபத்துறை டவுன் மஸ்ஜிதில் முசலி பிரதேச அனைத்து மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று 10 ஆம் திகதி நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் முசலிப் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் – முசலி உலமாக்கள் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது – கொரோனா – ஜனாஸா நல்லடக்கத்திற்காக – வேப்பங்குளத்தை சேர்ந்த ஒருவர் , தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை அன்பளிப்பு செய்வதாக (வக்பு ) அறிவித்துள்ளார்.