மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை..

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1604848525553"}

இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம். இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது.

சில இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும், ஏனைய பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்க்கையையும், தொழில்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன கூறுகையில்,

கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், முதலாவது பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் கழிந்த பின்னர், இரண்டாவது பரிசோதனை நடத்தாமல், அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாதவர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.