LPL போட்டித் தொடரை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி -அமைச்சர் நாமல் ராஜபக்ச

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1604571572657"}

இலங்கையில் எல்.பீ.எல் போட்டித் தொடரை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சும் கொவிட் தடுப்பு செயலணியும் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தொடரை நடாத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அனுமதி வழங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் போட்டித் தொடர் நடாத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், சில வேளைகளில் இந்தப் போட்டித் தொடர் ஹம்பாந்தோட்டையில் மட்டும் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.