மைக் பொம்பியோ தலைமையிலான அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை – சுதத் சமரவீர

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1603795232725"}

கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் அமெரிக்காவில் இருந்து வரும் ராஜதந்திரிகளை இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.



சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

24 மணி நேரத்திற்குள் ஒரு சிலரை சந்திக்கவே அவர்கள் வருகின்றனர் என்பதால், அவர்களை தனிமைப்படுத்தும் அவசியமில்லை. இவர்கள் தமது நாட்டில் இருந்து புறப்படும் முன்னர் PCR பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை வந்த பின்னரும் சுகாதார துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

கிழக்கு கடல் பரப்பில் கப்பல் ஒன்றில் தீ பிடித்த போது ராஜதந்திர ரீதியில் செயற்பட்ட விதம் இதற்கு சிறந்த உதாரணம்.

தனிமைப்படுத்தல் என்பது நோய் பரவுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை. இந்த ராஜதந்திரிகள் ஊடாக கொரோனா பரவாது என்ற நம்பிக்கையில் அவர்கள் வருகின்றனர் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.