அரசியலமைப்பின் 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்த காரணத்தை விளக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை தவிர்ந்த ஏனைய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தநிலையில் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், எச்.எம்.எம் ஹரீஸ், பைசல் காசிம்,எம் தௌபீக் மற்றும் நஸீர் அஹமட் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இதற்கு கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தலைமை தாங்கியுள்ளார்.
இதன்போது 20வது திருத்தத்துக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது திருத்தத்துக்கு வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான காரணத்தை கட்சியின் உயர்பீடத்துக்கு விளக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.