நடக்கவிருக்கும் உயர்தரப்பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பன தொடர்பில் இன்று அல்லது நாளை உரிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், உயர்தரப்பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுமா அல்லது பிற்போடப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாணவர்களின் சுகாதார நலனை கருத்திற்கொண்டே அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.