கொரோனா பெருந்தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் இன்னமும் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி இனி 7 நாடுகளுக்கு மட்டுமே பிரித்தானியர்களால் பயணிக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை பொறுத்தமட்டில், பெரும்பாலான நாடுகளில் அவற்றின் சொந்த வகையான கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வெளிவிவகார அலுவலகம் இன்னும் பிரித்தானிய பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவலை பார்க்கும்போது, அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இருந்து அகற்றப்படுவதாக தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளன.கடந்த வாரம் டென்மார்க், ஸ்லோவாக்கியா, ஐஸ்லாந்து மற்றும் குராக்கோ ஆகிய நாடுகள் அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டன.இதனால் தற்போது எவ்வித பயணக் கட்டுப்பாடுகளும் இன்றி பிரித்தானியர்கள் பயணப்படும் நாடுகளின் பட்டியல் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியர்கள் எவ்வித பயணக் கட்டுப்பாடுகளும் இன்றி பயணப்படலாம் என்ற பட்டியலில் முதலில் 60 நாடுகள் இருந்தன.தற்போது அந்த நாடுகளில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளதால் பிரித்தானியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதனால் தற்போதைய சூழலில் எவ்வித பயணக் கட்டுப்பாடுகளும் இன்றி பிரித்தானியர்களால் வெறும் 7 நாடுகளுக்கு மட்டுமே சென்று வர முடியும்.
• துருக்கி
• மெயின்லேண்ட் கிரீஸ் மற்றும் சில கிரேக்க தீவுகள்
• இத்தாலி
• ஜேர்மனி
• போலந்து
• சுவீடன்
• ஜிப்ரால்டர்