
பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த டிரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில், இருவருக்கும் பாசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் டிரம்ப். அத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும் நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.