சிறுவர் தினத்தை முன்னிட்டு ஐனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை

பௌதீக மற்றும் உளரீதியில் பாதிப்புகளை புறந்தள்ளும் பிரஜைகளை கொண்ட நாட்டை கட்டியெழுப்ப தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வௌிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நாட்டின் எதிர்கால சொத்துக்களான சிறார்களுக்கு அறிவுசார் திறன்களை விருத்தி செய்வதற்கு தேவையான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது அனைவரினதும் கடமை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிறார்களின் உடல் மற்றும் உளநலத்தை அனைத்து சந்தர்ப்பங்களிலும் உறுதி செய்யவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திகளை மிக நெருக்கமாக கொண்டுவந்தாலும் சமூக மேம்பாட்டுடனான மக்கள் காணப்படாவிடின், அது சிறந்த கட்டமைப்பாக காணப்படாது என்பது தமது நம்பிக்கை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆகையால் திறமை, சிறந்த மனப்பான்மை மற்றும் மொழிவளம் மிக்க சிறார்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.