ஜோ பிடனுக்கு எதிரான விவாதத்தில், அதிபர் டிரம்ப் வெற்றிபெற்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தற்போதைய தேவை அதிபர் டிரம்ப் என்பதை விவாதம் வெளிபடுத்திவிட்டதாக அவர்கள் கூறினர். எல்லாவிதத்தில் டிரம்பின் வாதம் மேலோங்கியிருந்ததாக அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா எந்தநிலையிலும் கம்யூனிசப்பாதையை நோக்கி போகாது என்பதை இந்த விவாத நிகழ்ச்சி வெளிச்சத்தில் கொண்டு வந்திருப்பதாக டிரம்ப் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.