ஜெமில் அவர்களே அரசியல் ஆதாயத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்பு நண்பர் ஜெமில் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் !

தென்கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட வரலாறு பற்றி உங்களது அரசியல் ஆதாயத்துக்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்துக்கு அல்லாஹ்வின் உதவியால் மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் அதி உன்னத பங்களிப்புக்கு அடுத்த படியாக அமைவது, இப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட காலப் பகுதியில் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒரு வருட கற்கைகளை பூர்த்தி செய்த நிலையில் தலைவர் அஷ்ரப் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் தமது பட்டப் படிப்பின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறக் கூடிய அபாயங்களை பற்றி எல்லாம் சிந்திக்காமல் தமது பட்டப் படிப்பை துச்சமாக கருதி கிழக்கு பல்கலைக்கழகத்தை பகிஷ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டு பல தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக மாணவர் தொகுதியினரான எங்களின் பங்களிப்புமும், எங்களுடன் சேர்ந்து போராடிய ஐந்து விரிவுரையாளர்களும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தேவை பற்றி தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு நீங்கள் வலியுறுத்தி கூறியதாகவும் அதன் பிரகாரம், அமையப்பெற்றதுதான் இந்த தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்றும் கூறி உண்மை அறியாத சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தேவை பற்றி யாரும் வலியுறுத்தி கூறும் தேவை தலைவர் அஷ்ரப்புக்கு ஒரு போதும் இருந்ததில்லை. அந்த கட்டுக் கதைகளை விட்டு விட்டு முடியும் என்றால் இன்றைய சமூகத்தின் தேவைகள் பற்றி இன்றைய உங்கள் SLMC தலைவரிடம் வலியுறுத்தி சாதித்துக் காட்டுங்கள் வாழ்த்த தயாராக இருக்கிறோம்.

 

 

ஜெமீல் அவர்களின் பதிவு…..????

தென் கிழக்கு பல்கலைக்கழக உருவாக்க முதுஷமும் மறைந்தும் மறையாத இந்த நாட்டு முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவரும்!

பயங்கரவாத சூழ்நிலை நிறைந்த காலப்பகுதியில் தென் கிழக்கு முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக் குறியாக்கபட்டதை
உணர்ந்து முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தை ஸ்தாபித்து அதற்கு தலைமை தாங்கி தென் கிழக்குக்கு பல்கலைகழகம் ஒன்றின் அவசியத்தை தலைவருக்கு வலியுறுத்தி 1995 ஒக்டோபர் 23 தலைவரின் பிறந்த தினத்தில் வெற்றி பெற்று உருவாக்கபட்டது தான்
தற்போது தென் கிழக்கின் முகவெற்றிலையாக இருக்கின்ற ஒலுவில் பல்கலைகழகம்.
இவ்வாறான பலம்பெரும் செயற்திட்டங்களை எம் சமூகத்திற்காக வித்திட்டவர் நம்மைவிட்டு பிரிந்து இன்றோடு 20 வருடங்கள் கடந்தோடிவிட்டது இருந்தும்
அவர் நமக்காக பெரும் விருட்சத்தையே தந்துவிட்டு போய்யிருக்குறார்.

ரஹ்மானே!
எங்கள் மனதில் வாழும்
மாமனிதர் அஷ்ரபிற்கு
நிறைந்த சுவர்க்கத்தை அருள்வாயாக…
ஆமீன்!

“பல்கலைகழக திறப்பு விழாவின் போது என்னால் மறைந்த தலைவருக்கு நினைவு சின்னம் வழங்கும் போது எடுக்கபட்ட நினைவுபடம்”

AM JAMEEL