குழந்தைகளையே உணவுப் பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதித்தால்…?
பெற்றோர்களுக்கு இருக்கும் பொதுவான புகார்களில் ஒன்று, அவர்களுடைய குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை என்பதே. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.
* ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்குவதற்கு முன்பு, ஆரோக்கியமான ஷாப்பிங்கைத் தொடங்குவது முக்கியமானது. விவசாயிகள் சந்தைக்கும், ஆர்கானிக் கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்களுக்கும் நேரடியாக குழந்தைகளை அழைத்து செல்லுங்கள், அப்போதுதான் பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு இடையே உங்கள் குழந்தைகளால் வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்.
* உணவு உண்ணும் செயல்முறையில் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமான அளவில் ஈடுபடுத்த, அவர்களையே பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும். அவர்களே தேர்ந்தெடுத்த ஃப்ரெஷ்ஷான பொருட்களை வைத்து, என்ன சமைக்கலாம் என்று அவர்களிடம் கேட்கலாம், தேர்ந்தெடுக்கும், முடிவெடுக்கும் ஆற்றல் தம்மிடம் இருப்பதாகத் தெரிந்து கொள்ளும் குழந்தைகள், உணவைக் குறித்து இன்னும் நேர்மறையாகவும், சோதனை முயற்சிகளுக்கு தயாராகவும் உணர்வார்கள்.
* உங்கள் குழந்தைகளை, நீங்கள் சமைக்கும்போதும் உணவுப்பொருட்களை சுத்தம் செய்யும்போதும் உங்களுடன் வேலைசெய்ய கூறுங்கள், அதில் உணவு சமைப்பதற்கான முன்னேற்பாடுகளான, நறுக்குதல், வெட்டுதல் போன்ற வேலைகளும் உள்ளடங்கும். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கத்திகளை குழந்தைகளிடம் தருவதன் மூலம், அவர்களையும் நறுக்கும் வேலைகளில் ஈடுபடுத்தலாம். இறுதி வரை இந்த வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உணவை சுவைத்து பார்க்க, எப்படி இருக்கிறது என்று கேட்க, இன்னும் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கவும். இதனால் அவர்கள் உணவு செய்யும் செயல்முறையின் ஒரு அங்கமாக தங்களை உணர்வார்கள், உணவுக்கு உரிமைதன்மையை உணர்ந்து கொள்வார்கள். பிறகு, உணவு ஒரு முழுமையான சரிவிகித உணவாக எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள தொடங்குவார்கள்.
* நீங்கள் பார்ப்பதைத்தான் சாப்பிடுவீர்கள். உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ் அல்லது கிச்சன் மேடைகளில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் இடுபொருட்களைக் காட்சிப்படுத்துங்கள். அதிக கலோரி உணவுகள், பதப்படுத்திய உணவுகள், சோடா மற்றும் இனிப்புகள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
* நீங்கள் சமைக்கும்போதே, உங்கள் குழந்தைகளை ஒரு உணவில் இடவேண்டிய இடுபொருட்களைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அப்போது, நீங்கள் ஒரு கறியை சமைக்கிறீர்கள் என்றால், அதில் என்னென்ன காய்கறிகளை சேர்க்க விரும்புகிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் கேட்கவும். அது, உணவு தொடர்பான சிந்தனையைத் தூண்டும். அதுமட்டுமல்லாமல், பல்வேறு வகையான மசாலா மற்றும் ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தவும். இது நல்ல வழிமுறையாக இருக்கும், இதனால்,உங்கள் குழந்தையின் சுவை உணர்வு மற்றும் விருப்பங்கள் பல்வேறு சுவைகளையும் அறியக்கூடியதாக மாறும்.