பாடசாலை மாணவர்களுக்கான சீருடை “வவுச்சருக்கு” பதிலாக “சீருடை துணி” வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

file image

அடுத்தாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சருக்கு பதிலாக சீருடை துணி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சீருடை துணி வழங்குவதற்காக கல்வி அமைச்சர் டலஸ் அலக பெருமவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சீருடை துணி, தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்திகள் மாத்திரம் பயன்படுத்தி தயாரித்து வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்காக 210 கோடி ரூபாய் பணம் செலவாகும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.

file image