எங்களுடைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டிலிருந்து2019ஆம் ஆண்டு வரை சகல துறைகளிலும், அபிவிருத்திநடவடிக்கைகளையும் முன்னேற்றகரமானமாற்றங்களையும் மேற்கொண்டுள்ளது – ஹக்கீம்

 

நாங்கள் எங்களது ஜனாதிபதி வேட்பாளருடன் சமூகம்சார்ந்த விடயங்களில் எவ்வித உடன்படிக்கையும்செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறுஉடன்படிக்கை செய்வதன் ஊடாக சிறுபான்மைசமூகத்திற்கு சாதகமானவற்றை சொல்லிவிட்டால் அவற்றை கொண்டுபோய் அப்பாவி நாட்டுப்புறபெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில்வித்தியாசமான இனவாத நோக்கோடு பிரசாரம் செய்ய ஒருகும்பல் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள்மிகவும் அவதானமாகத் தான் விவகாரங்களை கையாளவேண்டியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவர்> அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவுவழங்கும் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (08)திருகோணமலையில் இடம்பெற்ற போதே அவர் இதனைகூறினார்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில் மேலும்தெரிவித்தாவது,

திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குமிகக் குறைவான உறுப்பினர்களே தெரிவாகின்றனர். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற சூழ்நிலையில்அவ்வப்போது சில பிரச்சினைகள் உருவெடுத்தாலும்> தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பானஅவதானத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றஎங்களோடு சிநேகபூர்வமான அரசியல் உறவைபேணுகின்ற கட்சிகளோடு கலந்துரையாடி முன்னையஅரசிலும் பார்க்க இந்த அரசாங்கத்தில் பலபிரச்சினைகளை வெற்றிகரமாகதீர்த்துவைக்கப்;பட்டுள்ளன.

ஒருசில அமைப்புக்கள் தமிழ் மக்களுக்கிருந்தகெடுபிடிகளை அகற்றுவதில் நாங்கள் போதிய அக்கறைகாட்டவில்லை என்று நினைக்கின்றனர். இரண்டு பிரதானவேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமது சமூகம்சார்ந்த விடயங்கள் எவையும் குறிப்பிடப்பட்டில்லை என்றுகுற்றம் சுமத்துகின்றார்கள். இதே குற்றச்சாட்டை முஸ்லிம்தலைமைகளின் மீதும் சொல்கின்றார்கள்.

நாங்கள் சமூகம் சார்ந்த விடயங்களில் எவ்விதஉடன்படிக்கையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். இவ்வாறு உடன்படிக்கை செய்வதன் ஊடாக சிறுபான்மைசமூகத்திற்கு சாதகமாக எவற்றையும் சொல்லிவிட்டால்அதனை கொண்டுபோய் அப்பாவி நாட்டுப்புறபெரும்பான்மை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில்வித்தியாசமான இனவாத நோக்கோடு பிரசாரம் செய்ய ஒருகும்பல் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள்மிகவும் அவதானமாகத் தான் விவகாரங்களை கையாளவேண்டியுள்ளது.

இப்பொழுது பெரும்பான்மை மக்கள் மத்தியில் சஜித்பிரேமதாஸவுக்குள்ள உற்சாகமும் வரவேற்பும்அபரிமிதமானவை. அவர் இந்நாட்டின் இறைமைக்கும்மக்களது ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம்இல்லாத வகையில் போதிய அதிகார பரவலாக்கத்தைவழங்கத் தயாராகவுள்ளதாக கூறுகின்றார்.

அவர் மீது பெரும்பான்மை மக்கள் வைத்துள்ளபேரபிமானத்தை ஏதாவதொரு விதத்தில் இல்லாமல்செய்வதற்கு இனவாத சக்திகள்வழிப்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகையகும்பலுக்கெதிராக அரசியல் செய்கின்றபோது சிறுபான்மைதலைமைகள் இவ்விடயம் தொடர்பில் மிகுந்தஅவதானத்தோடு நடந்துகொள்ள வேண்டியுள்ளது. 

இந்த நிலையில் தான் சஜித் பிரேமதாஸவின் தேர்தல்விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றிலும், இந்நாட்டில்தேவையில்லாமல் இனவாதத்தை தூண்டுவதற்கு மாற்றுத்தரப்பினருக்கு இடமளிக்காமல் மிகப் பக்குவமாககையாளப்பட்டுள்ளது. 

ஏனெனில்> யாழ்ப்பாணத்தில் அண்மையில்திறந்துவைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின்பெயர் பலகையில் முதலிலேயே தமிழில் பெயரிடப்பட்டதைவைத்து சிங்கள மொழியை இரண்டாம்பட்சமாக்கிவிட்டார்கள் என்று படுமோசமான தரங்கெட்டஇனவாத அரசியலை செய்கின்ற கும்பலாகத்தான் அவர்கள்காணப்படுகின்றனர்.

இந்நாட்டின் அரசியல் யாப்பில் இரு மொழிகளுமே அரசகரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில்குறைந்தபட்சம் 99 சதவீத தமிழ் மக்கள் குடியிருக்கின்றயாழ்ப்பாண தீபகற்பகத்தில் அவ்வாறு தமிழில் முதலில்பெயர் பலகையொன்றை எழுதினால் பெரும்பான்மைசமூகத்தை காட்டிக்கொடுக்கின்ற விடயமாக அதனைமாற்றி அரசியல் பேசுகின்ற இந்த கும்பலை சரிவரஅடையாளம் கண்டுள்ளோம்.

அத்தகைய இனவாதிகளிடத்தில் எந்த நியாயத்தை அல்லதுஉரிமைகளை தமிழ் மக்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளமுடியும்? ஆனால்> இதே வேளையை அவர்களோ அல்லதுஅவர்களின் கும்பலில் ஒருவரோ செய்தால் அது பிழையாககருதப்பட மாட்டாது. அதனை நாங்கள் செய்தால் தான்தேச துரோகிகளாக சித்திரிக்கப்படுகின்றோம். எங்களைதான் பயங்கரவாதிகளாக எடுத்து காட்டுகின்றார்கள்.

இந்நாட்டின் இறைமைக்கும் மக்களது ஒற்றுமைக்கும்> பாதுகாப்புக்கும் குந்தகம் இல்லாத வகையில் போதியஅதிகார பரவலாக்கத்தை வழங்கத் தயாராகவுள்ளதாகஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். ஆயினும்> அவர் மீது பெரும்பான்மை மக்களுக்குள்ளபேரபிமானத்தை ஏதாவதொரு விதத்தில் இல்லாமல்செய்வதற்கு இனவாத சக்திகள்வழிப்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

எதிரணியில் மொட்டுக் கட்சிக்காரர்களுடன் முன்னாள்பயங்கரவாதிகள் அனைவரும்; ஒரே மேடையில் ஒன்றாகஅமர்ந்துகொண்டிருக்கின்றார்கள். திருகோணமலையில்முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபை அமைந்தபோதுஅதில் எங்களுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக இருக்கத்தக்கதாக> நாங்களும் எதிர்ப்பை தெரிவித்திருக்கத்தக்கதாக ஒருதலை பட்சமாக ஈழப்பிரகடனம் செய்தார்கள். ஆனால்> அந்த ஈழப்பிரகடனத்தை செய்த வரதராஜ பெருமாள் இன்றுஅவர்களுடன் மேடையில் உட்கார்ந்திருக்கின்றார்.

எங்களுடைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டிலிருந்து2019ஆம் ஆண்டு வரை சகல துறைகளிலும், அபிவிருத்திநடவடிக்கைகளையும் முன்னேற்றகரமானமாற்றங்களையும் மேற்கொண்டுள்ளது. ஆனாலும், அதைபற்றி பொது மக்கள் மத்தியில் போதிய பிரசாரம்செய்யப்படவில்லை. ஆகையால், அவை பற்றி மக்களுக்குதெளிவுபடுத்துவது அவசியமாகும்.

ஆட்சி அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பின்கதவால் வந்துசிறிது காலம் கைப்பற்றி வைத்திருந்தவர்கள் இப்பொழுதுமுன்கதவால் ஜனாதிபதி பதவியை கைப்பற்றவந்திருக்கின்றார்கள். தமது முயற்சி தோல்வியில்முடிந்ததன் விளைவாக இப்பொழுது முன்கதவால்ஜனாதிபதி பதவியை பெறமுண்டியடித்துகொண்டிருக்கின்றார்கள். 

இவ்வாறு இருக்க>  ஐக்கிய தேசிய கட்சியுடன்இணைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு இப்பொழுதுமக்கள் மத்தியில் காணப்படும் உத்வேகமும் உற்சாகமும்நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

நானும் கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசியகட்சியுடன் அரசியல் செய்து வருகின்றேன். ஆனால்> ஆதரவாளர்கள் மத்தியில் இவ்வாறான அதிகபட்சமானஉற்சாகத்தை முன்னர் ஒருபோதும் கண்டதில்லை.

அண்மையில் நடந்த ஒரு ஊடக மாநாட்டில் வெளிநாட்டுஊடகமொன்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் யுத்தமுடிவின் போது காணாமல் போனோர் பற்றி ஐ.நா.வில்உங்களுக்கெதிரான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதல்லாவாஎன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்க முடியாமல்ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ திணறியதைஎல்லோரும் கண்டீர்கள். அப்பொழுது கோட்டாபயராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஆளுக்காள் முகத்தைபார்த்தபடி திக்குமுக்காடி போனார்கள்.

யுத்தத்தை நாங்கள் செய்யவில்லை. இராணுவ தளபதியேஅதில் ஈடுபட்டார் என கூறி மழுப்பினார். இப்படிசொல்பவர்கள் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவைகீழ்த்தரமான முறையில் கைது செய்து> சிறையில்அடைத்து அவமானப்படுத்தியது மாத்தரமல்லாமல்> இப்போது இவ்வாறு சொல்கின்றார்கள். சர்வதேசத்தின்குற்றச்சாட்டு தம் மீது சுமத்தப்படுவதை வேறொருவர் மீதுசுமத்தி தப்பித்துக்கொள்வதற்காகவே இவ்வாறுகூறுகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைமுன்னிலைப்படுத்துவதிலும் பிரச்சினைகள் இருந்தன. அதில் கயிறிழுப்பு இருந்தமை உங்களுக்கு தெரியும். நாங்களே கொண்டுவந்த ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதிநடத்திய நாடகம் நாடறிந்தது.

பாராளுமன்றத்தில் அப்பொழுது நடந்த அட்டகாசம்பற்றியும் எல்லோருக்கும் தெரியும். பாராளுமன்றஉறுப்பினர்களை விலைக்கு வாங்க அவர்கள் பட்டபாடும்> அத்துடன் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களைவிலைபோகாமல் காப்பாற்றுவதற்காக ஹோட்டல்அறைகளில் அவர்களை பூட்டி வைத்து> போதாக்குறைக்குபின்னர் அவர்களை புனித மக்காவுக்கு அழைத்துச்சென்று> அவர்களிடம் சத்தியவாக்கு வாங்கி பின்னர் நிலைமைசீரானதும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தோம்.

இத்தனையும் செய்த ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு ஜனாதிபதி பதவியில் இன்னும் ஒரு வாரகாலமே இருக்க முடியும். அதற்குள் இப்போது அவருக்குபாராளுமன்றத்தில் ஒரு தேசிய பட்டியல் ஆசனம்தேவைப்படுகின்றதாம்;. தமது கட்சி சார்பில் அதற்காகபாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உள்ளவர்களிடம்பதவியை இராஜினாமா செய்து தருமாறுகெஞ்சிக்கொண்டிருப்பதாக தெரிகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒருசாரார் போய் மொட்டுசின்னத்தில் மேலும் ஒட்டிக்கொண்டிருக்கின்றனர். அத்துடன் அக்கட்சியின் அமைப்பாளர்கள் அநேகர்சாரிசாரியாக வந்து எங்களது முன்னணியுடன்இணைந்துகொண்டிருக்கின்றனர்.

அண்மையில் சுகததாஸ உள்ளக அரங்கில் வைத்துஆயிரக்கணக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணிஉறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காபண்டாரநாயக்க அணியுடன் சங்கமித்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாஸவின் வெற்றிக்காக  மிகவும் அர்ப்பணிப்புடன்இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.

இவ்வாறான மகத்தான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் போதுநாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேர்தலுக்குஇன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. அடுத்த13ஆம் திகதி புதன்கிழமையோடு  தேர்தல் பிரசாரநடவடிக்கைகள் அனைத்தும் முற்றுப்பெற்றுவிடும். அதற்குள்ளாக வீடு வீடாகச் சென்று வாக்களர்களைஅறிவுறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்கள்ஒவ்வொருவருக்கும் உரியது.

உலகின் ஆழமான இயற்கை துறைமுகங்களுள் ஒன்றானதிருகோணமலையை மேலும் அபிவிருத்திசெய்யவுள்ளோம். வெளிநாட்டு மூலதனத்தைகொண்டுவந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ளஇளைஞர் யுவதிகளுக்கு தொழிற்சாலைகளை நிறுவிஅதிக தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

இரு தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் எங்களுக்குஎதிராக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. அவற்றைப் பொறுத்தவரை ஊடக மத்தியஸ்த்தனம் என்பதுஅறவே இல்லாது செயற்படுகின்றன. வேட்பாளர்களுக்கானநேர ஒதுக்கீட்டை பொறுத்தவரை மிகக் குறைந்தளவிலானநேரத்தையே எங்களுக்கு அவை ஒதுக்கியுள்;ளன. அந்தஊடகங்கள் எவற்றை செய்தபோதிலும், நாடாளவியரீதியில் எங்களது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸஅமோக வெற்றியைப் பெறுவார் என்பதில் நாங்கள் அபாரநம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.