நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பில் 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கூடிய விசேட அமைச்சரவையில் ஏற்பட்ட கருத்து மோதல்களையடுத்து அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
இந்த யோசனை இப்போதைய சூழ்நிலையில் – அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டுவருவது முறையல்லவென்று சஜித் ஆதரவு அமைச்சர்களின் கடும் வாதப்பிரதிவாதங்களையடுத்து இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
அமைச்சர்கள் மங்கள , மலிக் ,மனோ ,ஹக்கீம் உட்பட்ட பல அமைச்சர்கள் இந்த யோசனையை எதிர்த்தனர்.பிரதமர் ரணிலுடன் சில அமைச்சர்கள் மட்டுமே ஆதரவை வெளியிட்டனர்.
இதனால் முதலில் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திவிட்டு வருமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்து விட்டார்.பிரதமர் கோரியதால் தான் தாம் இந்த அமைச்சரவையை கூட்டியதாக ஜனாதிபதி அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து ரணில் மற்றும் சஜித் அணிகளுக்கிடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.