மாகாணசபைத் தேர்தல்கள் தடைப்பட்டுள்ளமையில் முக்கியமாக பங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு என்பதால், இவ்விடயம் தொடர்பில் தமது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவு வழங்கியிருக்காவிடின் இன்று மாகாணசபைத் தேர்தல்களே இல்லாத இத்தகையதொரு நிலை ஏற்பட்டிருக்காது. வடக்கில் தற்போது மாகாணசபையொன்று இருந்திருக்கும் என்பதுடன், அதிகாரங்களும் காணப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.