“மு.கா. தேவைக்காக 62 லட்சம் மக்களின் வாக்குகளை தாரை வார்க்க முடியாது “-ஜாதிக ஹெல உறுமய

140226130223jhu_slmc_410px_11-06-13

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேவைக்­காக 62 இலட்சம் மக்­களின் வாக்­கு­களை தாரைவார்க்க முடி­யாது எனத் தெரி­விக்கும் அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய, தேர்தல் முறை மாற்­றத்தை எதிர்க்கும் முஸ்லிம் காங்­கி­ரஸின் பின்­ன­ணியில் சதித்­திட்டம் இருப்­ப­தா­கவும் தெரி­வித்த­து.

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் அலு­வ­ல­கத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர்மாநாட்டில் உரை­யாற்றும் போதே கட்­சி யின் ஊட­கப்­பேச்­சா­ளரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மானநிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தேர்தல் முறைமை மாற்­றப்­ப­டு­மென மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அதற்­க­மைய இன்று அனைத்து கட்­சி­களும் கலந்து பேசி பல்­வே­று­பட்ட யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்டு ஆரா­யப்­பட்டு சிறு­பான்மை இனத்­தி­ன­ருக்கோ சிறு கட்­சி­க­ளுக்கோ பாதிப்பு ஏற்­ப­டாத விதத்தில் புதிய தேர்தல் முறைமை மாற்றம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி செய­லாளர் நாயகம் நிசாம் காரி­யப்பர் கலந்து கொண்டு யோச­னை­களை முன்­வைப்­பது மட்­டு­மன்றி இணக்­கப்­பாட்­டையும் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஆனால் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்க்­கின்றார்.

இது என்ன நியாயம்? மனோ கணேசன், திகாம்­பரம், தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உட்­பட சிறு­பான்மை கட்­சிகள் அனைத்தும் தேர்தல் முறைமை மாற்­றத்­திற்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.
புதிய தேர்தல் முறைமை மாற்­றத்தில் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கோ சிறு கட்­சி­க­ளுக்கோ எவ்­வி­த­மான பாதிப்பும் இல்லை. என­வேதான் அக்­கட்­சிகள் அனைத்தும் இணக்கம் தெரி­வித்­துள்­ளன.

ஆனால் ஹக்கீம் மட்டும் எதிர்க்­கின்றார். அமைச்­ச­ரவை கூட்­டத்­திலும் எதிர்ப்பு வெளி­யி­டு­கின்றார். தனி­யொ­ரு­வரின் எதிர்ப்பில் இன்று நாட்­டுக்கு தேவை­யான முக்­கி­ய­மான விடயம் தள்­ளிப்­போ­டப்­பட்­டுள்­ளது.

தேர்தல் முறைமை மாற்­றத்தை எதிர்க்கும் ஹக்கீம் அதற்­கான கார­ணங்கள் என்­ன­வென்­பதை வெளிப்­ப­டுத்­தாமல் உள்ளார். எனவே இதற்கு பின்­ன­ணியில் யாரோ உள்­ளனர். சதி இடம்­பெ­று­கின்­றது என்ற சந்­தேகம் எமக்கு ஏற்­ப­டு­கின்­றது. இன்று சிலர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­களை கொண்டு வருவதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
சிலர் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென்கின்றனர். இக்கூட்டத்தினரும் தேர்தல் முறைமையை மாற்றத்தை எதிர்ப்பவர்கள் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

Tags