கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டிற்கு பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்

  1. கல்முனை மாநகர சபை பட்ஜெட்டை பொது மக்கள் பார்வையிடலாம்
 
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்ட அறிக்கை மாநகர சபையின் முகப்பு அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
குறித்த வரவு செலவுத் திட்ட அறிக்கையை பொது மக்கள் 2018-12-13 தொடக்கம் 2018-12-20 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் பார்வையிட்டு, இது தொடர்பான கருத்துக்களை 2018-12-24 ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இம்மாத இறுதிப்பகுதியில் மாநகர முதல்வரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது புதிதாக பதவியேற்ற சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.