நீதித்துறை மீதுள்ள சுதந்திரம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது : முன்னாள் ஜனாதிபதி

அரசாங்கம் தனது அரசியல் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நீதித்துறையை பயன்படுத்த தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.காலியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சரான ரிச்சர்ட் பத்திரனவின் 10ஆவது நினைவு தினம் நேற்று காலி நகர விளையாட்டு அரங்கத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்களை அமைச்சர்கள் கூறுவதுடன் விளக்கமறியலில் வைக்கப்படும் நாட்களையும் கூறுகின்றனர், இதனால் நீதித்துறை மீதுள்ள சுதந்திரம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

 

தொடர்ந்தும் சட்டத்தை மாற்றி, இராணுவத்தினருக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட உள்ளது எனவும் அரசாங்கம் இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.