மலேசியாவில் ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி) 2015-ம் ஆண்டில் மாற்றப்பட்டு புதியதாக சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டுவரப்பட்டது.
இந்த வரி முறையில் பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அரசு கண்டு கொள்ளாமல் செயல்படுத்தி வந்தது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வோம் என்று அறிவித்தது. அதன்படி அந்த கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மகாதீர் முஹம்மத் பிரதமர் ஆகி இருக்கிறார்.
நேற்று பதவி ஏற்றுக் கொண்ட அவர் உடனடியாக ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். மீண்டும் எஸ்.எஸ்.டி. என்ற பழைய வரி முறையே இருக்கும் அமுலில் என்று அவர் கூறியுள்ளார்