ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசின்உயர்மட்டக் குழு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது. இந்தக் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமை தாங்கவுள்ளார்.
விசேட திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நல்லிணக்கப்பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் தலைவர் மனோ தித்தவெல, பிரதிசொலிசிட்டர் ஜெனரல் நரேன் புள்ளே, பிரதமரின் ஆலோசகர் பிரசாந்தி மகிந்தரத்ன,வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மஹேஷினி கொலன்னே ஆகியோர் இந்தக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.
2015ஆம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணை தொடர்பிலானதீர்மானத்துக்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. அப்போதையவெளிவிவகார அமைச்சராகவிருந்த மங்கள சமரவீரவால் இந்த முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டிருந்தன.
2015ஆம் ஆண்டுமுதல் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம்நடைபெற்ற அனைத்து ஜெனிவா அமர்வுகளையும் மங்கள சமரவீர தலைமையிலேயே இலங்கைஎதிர்கொண்டது. இந்நிலையில், அரசுக்குள் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகக் கடந்த ஒக்டோபர் மாதம் மங்கள சமரவீரவின் பதவி பறிக்கப்பட்டது.
ரவி கருணாநாயக்கவிடமிருந்த நிதிஅமைச்சு மங்களவிடமும், வெளிவிவகார அமைச்சு ரவி கருணாநாயக்கவிடமும்கொடுக்கப்பட்டது. ரவி கருணாநாயக்க ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் அவரின்அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு திலக்மாரப்பனவிடம் கையளிக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திலக் மாரப்பன சந்திக்கும் முதலாவது ஜெனிவாக் கூட்டத் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.