(இராஜதுரை ஹஷான்)
தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையே இனவிரோதத்தினை உருவாக்கி நாட்டில் 30 வருடகால யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினை தோற்றுவித்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன
இதன் தொடர்ச்சியினை தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சுய நலன்பேணுக்காக பெயரளவு எதிர்கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியும் பின்பற்றி வருகின்றது. நாட்டில் இனவாதத்தினை தோற்றுவித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின குடும்பத்தினரே என்று மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது என தெரிவித்தார்.
இலங்கையில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகின்ற இனகலவரங்கள் பற்றியும், அதன் தோற்றுவாய்கள் தொடர்பில் தெளிவுப்படுத்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.