தாய்நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்னவுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு பிரதம நீதியரசரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவன்முறைகள் தொடர்பில் இணையத்தளங்கள் வாயிலாக கருத்து வௌியிட்டிருந்த மேஜர் அஜித் பிரசன்ன, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலவரங்களின் பின்னணியில் செயற்பட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அவரது கருத்து, அச்சுறுத்தல் மற்றும் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும், சட்டத்தரணியொருவரின் தொழில் விழுமியங்களுக்கு முரணான வகையில் இருப்பதாகவும் தெரிவித்து பொதுபல சேனா சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் என்பன தலையிட்டு மேஜர் அஜித் பிரசன்ன தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று குறித்த முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பொதுபல சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்ஞாஜோதி தேரர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.