அஹமட் சப்னி
தனக்கு எதிராக செயற்பட்ட பிரதியமைச்சர் ஹரீஸை உடனடியாக இடைநிறுத்துமாறும், இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமர் ரணில் விகரமசிங்க வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மூக்குடைந்த சம்பவம் ஒன்று 11.02.2018 அன்று அரங்கேறியமை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதியமைச்சர் ஹரீஸ் அண்மையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கு எதிராகவும் அன்று சட்ட ஒழுங்குகள் அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து போராடிய பிரதியமைச்சர் ஹரீஸ் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பிரதமர் கோரியிருந்திருக்கின்றார். அதை நான் மேற்கொள்கின்றேன் சேர் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி ஊடாக அவருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்.
இதன் காரணமாகவே குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை சென்ற 11ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் ”ஹரீஸுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், கட்சியின் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூட்டத்தில் பிரேரணை கொண்டு வந்தார். அதன் போது உள்ளிருந்த சில உயர்பீட உறுப்பினர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஆதரவானவர்கள் இக்கருத்தை ஏற்றாலும் சிலர் பிரதியமைச்சர் ஹரீஸுக்கு ஆதரவாக இது சமூகப்பிரச்சினை கண்டி சம்பவம் தொடர்பாக பிரதியமைச்சர் ஹரீஸ் மேற்கொண்டது சரி ஆகவே இதற்கு எதிராக நாம் ஒழுக்காற்று நடவடிக்கையோ அல்லது இடைநிறுத்தமோ மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை என தெரிவித்ததால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும், நிசாம் காரியப்பரும் அவரை சார்ந்த சிலரும் மூக்குடைந்ததுடன் ஒழுக்காற்று நடவடிக்கை முயற்சியில் தோல்லியடைந்தனர்.
குறிப்பாக ஹரீஸ் அவர்கள் பிரதமர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முஸ்லிம்களுக்கு எதிராகவும் நடைபெற்றுவரும் சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் பிரேரணைக்கு ஆதரவாக செயற்படுவோம் என எச்சரிகை விடுத்திருந்தார். அது மாத்திரம் இன்றி அண்மையில் பிரதமர் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக ஆராய ஒலுவிலுக்கு விரைந்து அம்பாறைக்கு செல்லாமல் எம்மை ஏமாற்றி விட்டார் என தெரிவித்திருந்ததுடன், அம்பாறை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஒலுவிலுக்கு வருகை தந்த பிரதமருக்கு முன்பாக மிக காரசாரமாக சட்டநடவடிக்கையை எடுக்குமாறு உரையாற்றியதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் களத்திற்கு விரைந்தவரும் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கருத்திற்கொண்டே பிரதமர் அமைச்சர் ஹக்கீமிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோரியிருக்கின்றார். இதை நேரடியாக கையாள முடியாத ஹக்கீம் நிசாம் காரியப்பர் ஊடாக உயர்பீட கூட்டத்தில் இவ்விவாகரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளதுடன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பாகவும் மாத்திரமே பேசப்பட்டது எனவும் தெரியவருகிறது. இந்த உயர்பீட கூட்டத்திற்கு ஹரீஸ் சமூகவளிக்கவில்லையாகினும் அவருக்கு இந்த விடயம் தெரியாது. எனினும் ஹக்கீமின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அவர் இந்த உச்சபீட கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்தார் என நம்பகமாக தெரியவருகிறது.
எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு உடனடியாக குரல்கொடுக்கும் கட்சியாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் துணிந்து செயற்பட வேண்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று எங்கே சென்று கொண்டிருக்கின்றது..? இனத்திற்கு பிரச்சினை வரும் போது குரல்கொடுத்த ஹரீஸை கட்சியை விட்டு வெளியேற்ற நினைக்கும் தலைமை யாருக்கும் பின்னால்? யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு சென்றுள்ளது என நாம் சிந்திக்க வேண்டும்! அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் தக்க தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் அல்லவா..!!
(இந்த செய்தி தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் தங்களது பக்க நியாயங்களை எமக்கு அனுப்பி வைக்கலாம்)
– பிரதம ஆசிரியர் –