தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேற போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்று இரவு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்த பின்னர் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
நேற்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.