நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாகவுள்ள அனைத்து பாடசாலைகளும் இவ்வாறு மூடப்படவுள்ளன. எனினும் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட் கிழமை 12 ஆம் திகதி வழமை போல பாடசாலைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்குப் பெட்டிகளை வைக்க பயன்படுத்தப்படும் 19 பாடசாலைகளும் மற்றும் கல்விக் கல்லூரிகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன. யாழ்.மத்திய கல்லூரி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, திருகோணமலை விபுலானந்த கல்லூரி, குருநாகல் மலியதேவ கல்லூரி, சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம், புத்தளம் இந்து மத்திய கல்லூரி, அனுராதபுரம் மத்திய கல்லூரி, பதுளை விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரி, மொனராகலை ரோயல் கல்லூரி, காலி சவுத்லண்ட் கல்லூரி, ஹம்பாந்தோட்டை சுச்சி தேசிய பாடசாலை, கேகாலை சுவர்ண-ஜயந்தி கல்லூரி என்பன உள்ளிட்ட பாடசாலைகள் இன்றுமுதல் மூடப்பட்டுள்ளன.
மேலும், கம்பஹா பத்தலகெதர கல்வியியல் கல்லூரி, பொலன்னறுவை புலதிஸி கல்வியியல் கல்லூரி என்பன மூடப்படவிருக்கின்றன. கொழும்பு டி எஸ்.சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி, களுத்துறை ஞானோதய மத்திய கல்லூரி, சென். ஜோன் கல்லூரி, கண்டி ரணபிம ரோயல் கல்லூரி, மாத்தளை சங்கமித்த மகளிர் கல்லூரி, நுவரெலியா காமினி தேசிய கல்லூரி போன்ற பாடசாலைகளும் இவ்வாறு மூடப்படவுள்ளன.