ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்ற வகையில் பிணைமுறி மோசடி அறிக்கையில் திருத்தம் : விமல்

மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மாற்றியமைப்பதற்குரிய சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது என்று மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
 
 எனவே, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித திருத்தமுமின்றி அது சபையில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ஸ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பிரதி என்னிடம் இருக்கின்றது. அதிலுள்ள பல விடயங்கள் தவறானவை. அதனால்தான் அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. என்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
 
 ரவியும் அவரது சகாக்களும் தற்போது இரவோரடிவாக விழித்திருந்து தமக்குப் பாதகமான விடயங்களை நீக்கிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.விசாரணை அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர் குற்றஞ்சுமத்தப்பட்டவர்களுக்கு அதை வழங்கி அவர்களுக்கு ஏற்றவகையில் திருத்தம் செய்யப்படுமானால் விசாரணை அறிக்கையை குப்பைத்தொட்டியில் போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறானதொரு அறிக்கை நாடாளுமன்றத்துக்கு தேவையில்லை” என்று உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
 
 “ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்றவகையில் பிணைமுறி மோசடி அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்று. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை வேறொன்று” என்று விமல் வீரவன்ஸ எம்.பியும் சுட்டிக்காட்டினார்.