இலங்கையுடனான  உறவுகள் மேலும் வலுப்பெறும்: ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர்

 

-ஊடகப்பிரிவு-

இலங்கை தேயிலையை நாம் தடைக்கு உட்படுத்தியிருந்தோம். ஆனால், இது எங்கள் அஸ்பெஸ்டஸ் ஏற்றுமதிக்கும் இந்த விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலைத் தொகுதியில் காணப்பட்ட ஒரு  பூச்சியினாலேயே இந்த சிறிய விவகாரம் ஏற்பட்டது என ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டீரிட்டி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (09) கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர்  ரிஷாட் பதியுதீனை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே தூதுவர் யூரி மேட்டீரிட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் இலங்கை தேயிலை ஏற்றுமதி விவகாரத்துடன், இலங்கைக்கான ரஷ்ய அஸ்பெஸ்டஸ் இறக்குமதியினை தொடர்புபடுத்தினால், இதனை பரவலாக சிந்திக்க வேண்டியதாக இருக்கும். அப்போது தடை செய்யப்பட வேண்டுமா? அல்லது இல்லையா? என்ற கேள்வியும் எழும். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேல் கிரைஸ்டொயில் தொழிற்துறையில் பணிபுரிந்து வந்துள்ளேன. அக்காலப்பகுதியில் அதாவது கடந்த முப்பது ஆண்டுகளில் புற்றுநோய்க்கு ஒரு தொழிலாளி இருப்பதாக அறிவிக்கப்படவில்லை. வெற்று கரங்களுடன் சுரங்கங்களில் கிரைஸ்டொயியை கையாளக்கூடிய பல தொழிலாளர்கள் உள்ளனர், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். நீங்கள் எங்களிடம் இருந்து கிறிஸ்ஸோசைலை இறக்குமதி செய்ய முடிவு செய்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.

உலகில் அஸ்பெஸ்டயினை வாங்குபவர்களிடையே இலங்கை முன்னணியாக காணப்படுகின்றது. அனைத்து அஸ்பெஸ்டாஸ் ஏற்றுமதி நாடுகளிலிருந்து 2015 ஆம் ஆண்டில்,  உலகில் நான்கு முன்னணி அஸ்பெஸ்டஸ் இறக்குமதியாளர்களாக இந்தியா, இந்தோனேசியா, சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டில் உலக அஸ்பெஸ்டஸ் இறக்குமதிகளில் இலங்கை 6% சத வீதத்தினை பெற்றுக்கொள்கின்றது. இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் படி, இரும்பு மற்றும் உருக்கு, கோதுமை அஸ்பெஸ்டஸ் ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூன்று முன்னணி இறக்குமதிகளாக உள்ளன.

சமீப காலமாக ரஷ்யாவின் அஸ்பெஸ்டஸ் இறக்குமதிகள் குறைந்த அளவிலான போக்கில் உள்ளன. இது 2014 ஆம் ஆண்டில் 33.87 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2015 ஆம் ஆண்டில் 27.92 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2016 ஆம் ஆண்டில் 28.80 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில்,இலங்கைக்கான ரஷ்யாவில் அஸ்பெஸ்டஸ் இறக்குமதி 13.57 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே இருந்தது.

இலங்கையுடன் மேலும் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இன்னும் குறைவாக உள்ளது. எமது பல்வகைப்படுத்தப்பட்ட உற்பத்திகளை விரிவுபடுத்துவதற்கு இது சரியான தருணம். இந்த தருணத்தில், மாஸ்கோவில் இடம்பெறவுள்ள இலங்கை – ரஷ்யா அரசாங்கங்களுக்கிடையிலான ஆணைக்குழு கூட்டத்திற்கு இலங்கை பிரதிநிதிகளின் வருகையினை மிக மகிழ்ச்சியாக எதிர்பார்க்கின்றோம். இவ்ஆணைக்குழு கூட்டத்தினுடாக நாம் பாரியளவிலான வர்த்தகத்தை ஆரம்பிக்க முடியும். எங்கள் உதவியுடன் இலங்கையுடன் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்நோக்க முடியும். ரஷ்யாவின் அபிவிருத்தி ஒத்துழைப்புடன் மின்வலு மற்றும் விவசாய துறைகளில் இலங்கையை நாம் ஆதரிக்க விரும்புகிறோம்.

2015 ஆம் ஆண்டில் ரஷ்ய சம்மேளனத்தினுடனான இலங்கையின் மொத்த வர்த்தகம் (இறக்குமதியும் ஏற்றுமதியும்) 435.83 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2016 ஆம் ஆண்டு 381.71 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியின் வர்த்தகம் 260.78 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது என தூதுவர் யூரி மேட்டீரிட்டி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்,

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்காக ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டீரிட்டியின் முயற்சியினை வரவேற்கின்றோம். ரஷ்யாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட காலமான உறவு இன்னும் நீடித்து வருகின்றது. தற்காலிக வர்த்தக மாற்றங்களைத் தவிர, இலங்கையுடனான ரஷ்ய கூட்டமைப்புக்கு அதிகமான நீண்டகால ஒத்துழைப்பு நோக்கு உள்ளது என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

ரஷ்யாவின் தேயிலைத் தேவையில் 23 வீதத்தை இலங்கை நிவர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இலங்கை தேயிலையைக் கொள்வனவு செய்யும் பிரதான வெளிநாட்டு கொள்வனவாளராக ரஷ்யா காணப்படுகின்றது. வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 25 மில்லியன் கிலோகிராம் தேயிலை இலங்கையிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், அதனூடாக 19 பில்லியன் ரூபா வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.  இலங்கையின் அனைத்து வகையான தேயிலையினை கொள்வனவு செய்வதில் ரஷ்யா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இருப்பினும், 2015 ஆம் ஆண்டில், ரஷ்யர் 156.65 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேயிலையின் மிக உயர்ந்த முதன்மை வாங்குபவராகவும், இரண்டாவது முன்னணி வாங்குபவராக துருக்கி இருந்தது எனவும் இவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு மாஸ்கோவில் இடம்பெறவுள்ள இலங்கை – ரஷ்யா அரசாங்கங்களுக்கிடையிலான ஆணைக்குழு கூட்டத்திற்கு ஒரு வலுவான குழுவை நாங்கள் தயார் செய்வோம். இதனூடாக பெரிய வர்த்தகத்தினை ஆரம்பிக்க முடியும். மேலும் எனது அதிகாரிகளுடன் இது தொடர்பான பணிகளைச் செய்ய ஆரம்பித்து இருக்கின்றேன். இலங்கை தேயிலை ஏற்றுமதிகள் உயர்ந்த மட்டத்தில் உள்ளன. இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலைத் தொகுதியில் காணப்பட்ட ஒரு  பூச்சி விவகாரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொதியிடல் பொருட்களால் கேள்விக்குட்படுத்தப்பட்ட குறிப்பிட்ட பொதியில், பொதியிடல் பொருள் பயன்படுத்தவில்லை என எனக்கு தகவல் கிடைத்தது.

எங்கள் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி ரஷ்யா சந்தையில் கவர்ச்சிகரமான சாத்தியங்கள் காணப்படுகின்றன.  இந்த சாத்தியங்கள் குறித்தும் நாம் ஆராய ஆர்வமாக இருக்கின்றோம். எங்கள் அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான ரஷ்யாவின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.