இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பான விவகாரத்தில், இலங்கையின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாதென இந்தியா அறிவித்துள்ளது.
இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்மானமொன்றை மீனவர்கள் விவகாரத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பில், வருடமொன்றுக்கு 65 நாட்கள் மீன்பிடிப்பது தொடர்பில் இந்திய மீனவர்கள் விடுத்த கோரிக்கை, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவால் நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு எதிர்பார்த்திருந்த நிலையில், இலங்கை அமைச்சரின் இந்தக் கருத்து அதிருப்தியளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை – இந்திய மீனவ பிரதிநிதிகள் இணைந்து கலந்துரையாடி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகான முன்வர வேண்டுமெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.